கருணாநிதி ஏன் தேசிய கட்சிகளோடு கூட்டு வைக்கவில்லை – திருமா விளக்கம்

சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தை வேட்பாளர் திருமாவளவன் காட்டுமன்னார்குடி  ஒன்றியத்தில் நான்முனிசிபல், தண்டேஸ்வரநல்லூர், வக்கராமாரி, நாஞ்சலூர், சிவாயம், மெய்யாத்தூர், தெம்மூர், வடமூர், கூடுவெளிச்சாவடி, ஆட்கொண்டநத்தம், சிவக்கம், லட்சுமிகுடி, செட்டிகட்டளை, மேலவன்னியூர், சோழக்கூர், நெய்வாசல், எள்ளேரி, சர்வராஜன் பேட்டை மற்றும் லால்பேட்டை உள்ளிட்ட 50 கிராமங்களில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாமல்லன், மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சிவராமன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன் தொகுதி பொறுப்பாளர் சூ.க.விடுதலை செழியன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் இணைந்து வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக தொல்.திருமாவளவனுக்கு ஓமக்குளத்தில் மக்கள் பெருந்திரளாக திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ஓமக்குளம் பள்ளிவாசல் முன்பு அவர் பேசியதாவது:–

தலைவர் கருணாநிதி ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறார். கலைஞர் நினைத்திருந்தால் பாரதிய ஜனதா வோடும் அல்லது காங்கிரசோடும் கூட்டணி அமைத்திருக்க முடியும். பாரதிய ஜனதாவை ஒருபோதும் ஆட்சியமைக்க அனுமதிக்க மாட்டோம் என துணிந்து தலைவர் கருணாநிதி முடிவெடுத்திருக்கிறார். அதற்கு காரணம் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும், பின்தங்கிய மக்களையும் பாதுகாத்திட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கம்தான்.

அதனால்தான் மோடியோடு கூட்டாணி சேராத தலைவர் கருணாநிதி சாதாரணமான சாமானியனான திருமாவளவனோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார். மோடியோடு கூட்டணி சேர விரும்பாத தலைவர் கருணாநிதி பேராசிரியர் காதர் மொய்தினோடும், பேராசிரியர் ஜவாஹிருல்லாவோடும் கூட்டணி அமைத்திருக்கிறார். அதற்கு என்ன காரணம்? மதவாதிகளை ஆட்சியமைக்க அனுமதிக்க கூடாது என்பதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

Leave a Comment