அதிமுகவிற்கு மாற்றாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்த கூட்டணி ஆட்சி வேண்டும் பேராசிரியர் காதர் மொஹித்தீன் பேட்டி!

மங்கலம்பேட்டையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொஹித்தீன் அளித்த பேட்டி:- மத்தியில் பாஜக  ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை மட்டும்  கூறிவருகிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசாக மத்திய அரசு திகழ்கிறது. தமிழகத்தில் அதிமுக அறிவித்த திட்டங்கள் அறிவிப்புகளாகவே உள்ளன. செயல் திட்டங்களாக மாறாமல் இருப்பது வேடிக்கையானது.யார் முதலமைச்சர் என்கிற சந்தேகம் மக்களிடத்தில் இப்பொழுது எழுந்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மாற்றாக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சிமுறையில் பங்கேற்கும் வகையில் செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விரும்புகிறது. இவ்வாறு பேராசிரியர் காதர் மொஹித்தீன் தன் பேட்டியில் கூறியுள்ளார்.

Read More