காட்டுமன்னார்குடியில் வெறிநாய் தொல்லை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

காட்டுமன்னார் குடியில் சாலைகள் மற்றும் கடைகளின் முன்பாக ஏராளமான வெறிநாய்கள் சுற்றி வருகின்றன. அவை கடை வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது பின்னாலே வந்து கடிப்பதற்கு ஓடிவருகின்றன. வாகனங்களுக்கு குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சுற்றிதிரியும் இந்த தெருநாய்களை பேரூராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என்று பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே உடனடியாக தெருநாய்களை பிடித்து காட்டுப் பகுதியில் விடவேண்டும் என்று பொது மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment