ஏரிக்கரையில் மழலையர் பள்ளி வாகனம் விபத்து: கொள்ளுமேடு குழந்தைகளுக்கு காயம்

லால்பேட்டையைச் சேர்ந்த தனியார் மழலையர் பள்ளியின் வாகனம் குழந்தைகளுடன் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்த வேளையில் திருச்சின்னபுரம் அருகே புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த கொள்ளுமேடு குழந்தைகள் இருவர் உள்பட நான்கு குழந்தைகளும்,ஓட்டுனரும் காயமடைந்துள்ளனர்.

இரு குழந்தைகளும்,ஓட்டுனரும் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியதாகவும்,இரு குழந்தைகள் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related posts

Leave a Comment