புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் நமதூர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி

கொள்ளுமேடு கடைத் தெருவில் இருக்கும் மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களாக மராமத்து பணிகள் நடைபெற்து வந்தது. பயிண்ட் அடித்தல்,டைல்ஸ் பதித்தல்,ஏசி வசதி செய்தல் போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

image-0fb460be7917a2aed9fd097e4823d23fbcce65b83e3de68b6c6a1683f77f43b2-Vimage-285f3a7a228236b17aadc9b65f9d4209fdc24392374bfb12f28291b736c07dd7-V

பள்ளியின் முகப்பு வராண்டா, ஒளுச் செய்யும் இடம்,உள்பள்ளி, வெளி வராண்டா மற்றும் மாடியில் இயங்கும் மக்தப் மதரஸா உள்ளிட்ட இடங்கள் புதிய பைண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

image-c516b663e6105c8d6d159d451a97b8cfdbef6b78ad6176b25ef1fb0c35cac8c3-Vimage-d264357c185426423d732e9ffde695d5b574dd47d93cb79ce9266ee97cdfd831-V

மேலும் உள் பள்ளியில் சுவற்றில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.இன்னும் உள்பள்ளியில் ஏசி குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

image-eedbfd5165c59b835a91029a58ec95ddae21256b7f38662a48527a30db776b9a-Vimage-cdf36d246542d2f9ba2d5e3e9d723b95ea8772f6ff51a87cbd2ac24ef1c1fba5-V

இந்த பணிகள் நமதூரைச் சேர்ந்த ஹாஜி எம்.ஒய்.முஹம்மது அக்பர் அவர்கள் கண்காணிப்பில் நடைபெற்றுள்ளது.இது குறித்து அவர் நமது தளத்திடம் பேசும் இது போன்ற பள்ளிவாசல்களை பராமரிக்கும் பணியில் நாம் அணைவரும் ஈடுபட வேண்டும் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இத்தகைய நற்பணிகளில் தம்மை மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

image-c40c677e254c2d6910d684f1d3a25cf43e218d0aa35d76a97417d9d7aa4b4603-Vimage-454d630f48ca9b87815e8d6b8f6392270e7bbb1de995c54b29297df65767f8b5-V

தற்போது நமக்கு முன்பு இருக்கும் பணி என்னவென்றால்… அழகுபடுத்தப் பட்டிருக்கும் இந்த பள்ளியை அமல்களால் அலங்கரிக்க வேண்டும்.

image-a100b9d8b358731ba8621e732f92e7ed9b96da08520c1408b2c9cf9081e6cf39-Vimage-57f27046fd86aa62500b81120e972448e5c3926bb37847a0320f1be87efed651-V

ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும் அந்த பள்ளியை அமல்களால் நாம் அலங்கரிக்காவிட்டால் நாளை மறுமையில் இது குறித்தும் அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவோம் என்ற விஷயத்தை இந்த மஸ்ஜிதுத் தக்வாவின் மஹல்லா வாசிகள் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

image-1da552ae0434fbe040146788e8df4e1b8dcd7bb46c389e86096bae91387f021a-Vimage-9ec82315b9a8a4c004471d6dff6390a81300de505dda310c5142b9859b39ad2f-V

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது எண்ணங்களை விசாலமாக்கி நல்லமல்கள் செய்யும் அடியார்களில் நம்மை ஆக்கி அருள்வானாக…! ஆமீன்..!

Related posts

Leave a Comment