கடலூர் மாவட்டத்தில் பலாப் பழம் சீசன் தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது.

பண்ருட்டி பகுதியில் விளைகின்ற சுவை மிகுந்த பலாப் பழங்கள் பிரசித்திப் பெற்றதாகும். இப் பழங்களை மக்கள் விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம். பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது.

நன்கு பழுத்த பலாப் பழங்கள், கும்பகோணம்- விக்ரவாண்டி சாலையில் காடாம்புலியூர் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில், பலாப் பழங்களை மலைபோல குவித்து வைத்துள்ளனர். இங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. ஐந்து கிலோ எடை கொண்ட நடுத்தர ரக பலாப் பழம், ரூ,.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எடைக்குத் தகுந்தாற்போல் ரூ.600 வரை விற்கப்படுகிறது.

Related posts

Leave a Comment