அமீரக ஷார்ஜா மண்டலம் தமுமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி.

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் சி.கே.சனாவுல்லா,திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா,தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஹமீது ரஹ்மான் மற்றும் திமுக,முஸ்லீம் லீக், மதிமுக,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஷார்ஜா இந்தியன் சோஷியல் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். அமீரக தமுமுக துணைச் செயலாளர் கஸ்ஸாலி, ஷார்ஜா மண்டல தமுமுக தலைவர் ஆயங்குடி சலீம் ரப்பானி உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஷார்ஜா,அஜ்மான்,துபை,அபுதாபி,அல் அய்ன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Read More

கொள்ளுமேடு KYS இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ… நமது ஊர் இளைஞர்கள் ஒன்றினைந்து இன்றியமையாது ஒற்றுமையுடன் இயங்கிவரும் KYS சமூக நல இயக்கமானது பல மக்களின் நல் ஆதரவையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது… அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் ஏகத்தின் அதிபதியான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும். அல்ஹம்துலில்லாஹ் ஒற்றுமையை பரைசாற்றும் நிகழ்வுகளும் நமதூரில் நடக்கும் இவ்வேளையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஜமாத்தினரையும் அழைத்து இன்ஷா அல்லாஹ் நாளை அஸர் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயானுடன் *இப்தார் நிகழ்ச்சி* நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொள்ளுமேடு வாழ் அனைத்து சகோதரர்களும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.. தங்கள் வருகையை எதிர்நோக்கும்… *KYSஅமைப்புக்குழு* கொள்ளுமேடு.  

Read More

சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக கொள்ளுமேட்டில் இஃப்தார் நிகழ்ச்சி

தமுமுக மாணவர் பிரிவு சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக கொள்ளுமேட்டில் இன்று இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல் ஹம்துலில்லாஹ்.

Read More

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் மெளலானா மெளலவி முப்தி அல்ஹாஜ் S.A . அப்துர்ரப் ஹஜ்ரத் மறைவு

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் மெளலானா மெளலவி முப்தி அல்ஹாஜ் S.A . அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்கள் இன்று இரவு 1.15 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. அன்னாரின் ஜனாஸா ஜன்னத் நகர் ஜன்னத் நயிம் மஸ்ஜித் பின்புறம் உள்ள பீர் முகம்மது அவர்களின் இல்லத்தில் உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.  

Read More

மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக மாபெரும் சமூக நல்லிணக்க பெருவிழா!

மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக மாபெரும் சமூக நல்லிணக்க பெருவிழா! தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு !

Read More

கொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு

கொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

Read More

கொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.

நமது ஊர் உதவி பெறும் முஸ்லிம் உயர் நிலை பள்ளி கொள்ளுமேடு இந்த வருடம் (2017-2018)பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 % சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ & மாணவிகளுக்கும் மற்றும் இவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள் அனைவர்களுக்கும் எங்கள் கொள்ளுமேடு இணையதளத்தின் சார்பாக பாராட்டுகிறோம். வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் பள்ளியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்கள் A .SHAJARITHUNNISA 416 D/o Abdul Malik S.MASURA BEGAM 390 D/o Shahul Hameed R.MOJAHIDHA BANU. 390 D/o Rahamathullah MOHAMED NAVFAL 371 S/o Thameemul Ansari

Read More

அன்பார்ந்த கொள்ளுமேடுவாழ் சகோதர்களே.

#அல்ஹம்துலில்லாஹ்!! #அல்ஹம்துலில்லாஹ்!! #அல்ஹம்துலில்லாஹ்!! #அன்பார்ந்தகொள்ளுமேடுவாழ் சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று நடைபெற்ற நிகழ்வு நம் ஒவ்வொருடைய நிண்ட நெடிய கனவாக இருந்த நமதூர் ஒற்றுமை இன்று நிகழ்ந்து இருக்கிறது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒற்றுமைக்காக உழைத்த நல்வுள்ளங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!! இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, “கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை” என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு. நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும்…

Read More

கொள்ளுமேடு தக்வா மஸ்ஜிதில் ஜமாஅத் ஒருங்கிணைபு நிகழ்ச்சி புகைப்படம்.

கொள்ளுமேடு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த ஜமாஅத் ஒருங்கிணைப்பு தற்போது சாத்தியமாகியிருக்கிறது. இனிவரும் தலைமுறையினரின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த ஒருங்கிணைப்பு நல்ல பலனளிக்கக்கூடியதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த ஒற்றுமைக்கு பாடுபட்ட நல்உள்ளங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளும் பெருங்கருணையும் உண்டாகட்டுமாக. அன்புடன், எப்.முஹம்மது ரிஃபாயி புகைப்படம்  N. அமானுல்லா

Read More