கொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு

கொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

Read More

கொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.

நமது ஊர் உதவி பெறும் முஸ்லிம் உயர் நிலை பள்ளி கொள்ளுமேடு இந்த வருடம் (2017-2018)பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 % சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ & மாணவிகளுக்கும் மற்றும் இவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள் அனைவர்களுக்கும் எங்கள் கொள்ளுமேடு இணையதளத்தின் சார்பாக பாராட்டுகிறோம். வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் பள்ளியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்கள் A .SHAJARITHUNNISA 416 D/o Abdul Malik S.MASURA BEGAM 390 D/o Shahul Hameed R.MOJAHIDHA BANU. 390 D/o Rahamathullah MOHAMED NAVFAL 371 S/o Thameemul Ansari

Read More

அன்பார்ந்த கொள்ளுமேடுவாழ் சகோதர்களே.

#அல்ஹம்துலில்லாஹ்!! #அல்ஹம்துலில்லாஹ்!! #அல்ஹம்துலில்லாஹ்!! #அன்பார்ந்தகொள்ளுமேடுவாழ் சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று நடைபெற்ற நிகழ்வு நம் ஒவ்வொருடைய நிண்ட நெடிய கனவாக இருந்த நமதூர் ஒற்றுமை இன்று நிகழ்ந்து இருக்கிறது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒற்றுமைக்காக உழைத்த நல்வுள்ளங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!! இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, “கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை” என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு. நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும்…

Read More

கொள்ளுமேடு தக்வா மஸ்ஜிதில் ஜமாஅத் ஒருங்கிணைபு நிகழ்ச்சி புகைப்படம்.

கொள்ளுமேடு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த ஜமாஅத் ஒருங்கிணைப்பு தற்போது சாத்தியமாகியிருக்கிறது. இனிவரும் தலைமுறையினரின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த ஒருங்கிணைப்பு நல்ல பலனளிக்கக்கூடியதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த ஒற்றுமைக்கு பாடுபட்ட நல்உள்ளங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளும் பெருங்கருணையும் உண்டாகட்டுமாக. அன்புடன், எப்.முஹம்மது ரிஃபாயி புகைப்படம்  N. அமானுல்லா

Read More

ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!! புனித ரமழான் சிறப்புப் பதிவு

⚬அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள் ⚬ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்! ⚬இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்! ⚬ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்! ⚬உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்! ⚬ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்! ⚬எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்! ⚬ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்! ⚬ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்! ⚬ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்! ⚬ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்… நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது. ◽ சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. ◽ அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச்…

Read More

லால்பேட்டை அருகே அரசு கலைக் கல்லூரி அமைக்க வக்ஃப் வாரியம் அனுமதி

லால்பேட்டை, மங்களம்பேட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழக் கூடிய பகுதியாகும். மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.க.அ. அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சமுதாய மக்கள் பயன் பெற அப்பகுதியில் கலைக் கல்லூரி அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அதனை வலியுறுத்தி வந்தார். லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி பள்ளி கூட விழாவில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் MLA அவர்களும் அப்பகுதியில் சமுதாய மக்கள் பயன் பெறும் வகையில் கலைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி பேசினார். இந்நிலையில் சிதம்பரம் லால்கான் மஸ்ஜித் திற்கு சொந்தமான எள்ளேரியில் கலைக் கல்லூரி அமைக்க 5 ஏக்கர் நிலம் கேட்டு தமிழ்நாடு அரசு வக்ஃப்…

Read More

கொள்ளுமேடு அல் அமான் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது.

கொள்ளுமேடு அல் அமான் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் தரமான கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள்,ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்,பொது அறிவுத்திறன், மார்க்க கல்வி, யோக பயிற்சி, விளையாட்டு பயிற்சி மற்றும் பல சேவைகள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தொடர் கண்காணிப்பு, அனுபவமிக்க ஆசிரியைர்கள், திறமையான நிர்வாகம் கொண்டு செயல்படுகிறது. உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்பீர்..,   Email id ; alamanschoolkollumedu@gmail.com Facebook id ; https://www.facebook.com/alamanschool.kollumedu Contact : +91 9585363626

Read More

கொள்ளுமேட்டில் முடிவுக்கு வருகிறது நீண்ட கால பிரச்சினை.

கொள்ளுமேட்டில் முடிவுக்கு வருகிறது நீண்ட கால பிரச்சினை நமதூரில் பல மாதங்களாக நடைபெற்று வந்த ஜமாஅத் ஒருங்கிணைப்பு கிட்ட தட்ட சில நிபந்தனை கொண்டு முடிவுக்கு வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இதற்கான முறையான அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை வெளியாகும் என்று முதற்கட்ட தகவல் வந்துள்ளது. இனி வரும் காலங்களில் நம் ஊர் மக்கள் அனைவரையும் அல்லாஹ் எந்த வித பாகுபாடின்றி ஒற்றுமையோடும் சமுக நல்லிணக்கத்தோடும் வாழ அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்..

Read More