அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த கட்டணத்தில் இன்சூரன்ஸ் செய்தால் போதுமானது. 2. அமீரகத்தின் வழியாக பயணிக்கும் டிரான்ஸிட் பயணிகள் 48 மணிநேரம் வரை கட்டணம் இன்றி உள்ளே வந்து செல்லலாம், அதேபோல் 96 மணிநேரம் வரை நீட்டித்து தரப்படும் டிரான்ஸிட் விசாவிற்கு 50 திர்ஹம் மட்டும் செலுத்தினால்…

Read More

எள்ளேரியில் மஸ்ஜித் முஹிப்பி ஷாஹ் நூரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

சமுதாய தலைவர்கள் – சங்கைக்குரிய ஆலிம்கள் – அமைச்சர் – சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றர் கடலூர் மாவட்டம் லால்பேட்டை அருகே எள்ளேரியில் பிடாரிகுளம் அருகே உள்ள தென்றல் நகரில் மஸ்ஜித் முஹிப்பி ஷாஹ் நூரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 2018 ஜுன் 25 ம் தேதி திங்கட்கிழமை (ஹிஜ்ரி 1439 ஷவ்வால் பிறை 10) அன்று காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. மவ்லானா மவ்லவி ஏ. முஹம்மது ஷஃபீ முஹிப்பி மன்பஈ ஹள்ரத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி க்கு, எள்ளேரி தெற்கு தெரு, வடக்குத் தெரு ஆகிய மஹல்லாக்களின் நாட்டாண்மைகள், முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள், ஊர் பொதுமக்கள், இமாம்கள் மற்றும் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். லால்பேட்டை ஜே.எம்.ஏ. அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா ஹாஃபிழ் காரி…

Read More