அமீரக ஷார்ஜா மண்டலம் தமுமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி.

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் சி.கே.சனாவுல்லா,திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா,தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஹமீது ரஹ்மான் மற்றும் திமுக,முஸ்லீம் லீக், மதிமுக,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஷார்ஜா இந்தியன் சோஷியல் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். அமீரக தமுமுக துணைச் செயலாளர் கஸ்ஸாலி, ஷார்ஜா மண்டல தமுமுக தலைவர் ஆயங்குடி சலீம் ரப்பானி உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஷார்ஜா,அஜ்மான்,துபை,அபுதாபி,அல் அய்ன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Read More

கொள்ளுமேடு KYS இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ… நமது ஊர் இளைஞர்கள் ஒன்றினைந்து இன்றியமையாது ஒற்றுமையுடன் இயங்கிவரும் KYS சமூக நல இயக்கமானது பல மக்களின் நல் ஆதரவையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது… அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் ஏகத்தின் அதிபதியான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும். அல்ஹம்துலில்லாஹ் ஒற்றுமையை பரைசாற்றும் நிகழ்வுகளும் நமதூரில் நடக்கும் இவ்வேளையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஜமாத்தினரையும் அழைத்து இன்ஷா அல்லாஹ் நாளை அஸர் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயானுடன் *இப்தார் நிகழ்ச்சி* நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொள்ளுமேடு வாழ் அனைத்து சகோதரர்களும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.. தங்கள் வருகையை எதிர்நோக்கும்… *KYSஅமைப்புக்குழு* கொள்ளுமேடு.  

Read More