ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!! புனித ரமழான் சிறப்புப் பதிவு

⚬அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள் ⚬ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்! ⚬இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்! ⚬ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்! ⚬உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்! ⚬ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்! ⚬எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்! ⚬ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்! ⚬ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்! ⚬ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்! ⚬ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்… நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது. ◽ சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. ◽ அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச்…

Read More