ஆயங்குடியில் தமுமுக நடத்திய பெண்களுக்கான மார்க்க விளக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர தமுமுக நடத்திய மக்தப் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் பெண்களுக்கான மார்க்க விளக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் தமுமுக மமக நகர தலைவர் A.J.நியமத்துல்லாஹ் தலைமையிலும் தமுமுக மமக மாவட்டம் மற்றும் நகரம்,ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையிலும் (07-04-2018) அன்று நடைபெற்றது. தமுமுக மமக நகர துணை தலைவர் H.அப்துல் காதர் தொகுப்புரையாற்றினார். தமுமுக நகர துணை செயலாளர் I.அம்ஜத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது முஸ்லிம்கள் “அமைப்பாய் திரள்வதன் அவசியம்”என்ற தலைப்பிலும் மமக மாநில கொள்கை பரப்புச்செயளாளர் கோவை செய்யது “இறையச்சம்”என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் மமக மாநில தலைமை செயற்க்குழு உறுப்பினர் A.V.அப்துல் நாசர், நூருல் அமீன், தமுமுக மமக மாவட்ட தலைவர்…

Read More