அமீரக வேலைவாய்ப்பு விசாவிற்கான கட்டாய நன்னடத்தை நற்சான்றிதழ் சட்டம் நிறுத்தி வைப்பு!

அமீரகத்தில் வேலைவாய்ப்பு விசா பெற விரும்புவோர் கட்டாயம் தங்கள் நாடுகளிலிருந்து அல்லது கடைசியாக தொடர்ந்து 5 வருடங்கள் தங்கியிருந்த வெளிநாடுகளிலிருந்து நன்னடத்தை நற்சான்றிதழை பெற்று விண்ணப்பத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த பிப்ரவரி 4 முதல் அமுலுக்கு வந்தது. இதில், இந்தியர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வந்ததைப் போலவே பிற நாட்டினரும் சந்தித்திருப்பர் என யூகித்துக் கொள்ளலாம். பல்வேறு இடர்ப்பாடுகள் நிலவிய நிலையில் அந்த மாவட்ட எஸ்பி அலுவலகங்கள் வழங்கும் போலீஸாரின் தடையில்லாச் சான்றிதழையே நன்னடத்தை சான்றிதழுக்கு மாற்றாக ஏற்க முன்வந்தது அமீரக தூதரகம். மேலும், அமீரகத்திலுள்ள இந்திய தூதரகமும் தடையில்லாச் சான்றுகளை இங்கிருந்தே பெற்றுக்கொள்ள உதவி செய்ய முன்வந்தது . இந்நிலையில், கடந்த வாரம் இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு கட்டாய நன்னடத்தை சான்றிதழ் திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக…

Read More

கொள்ளுமேடு தெற்கு தெரு A.J.முஹம்மது பாருக் மறைவு

கொள்ளுமேடு தெற்கு தெருவில் வசிக்கும் M.F.நியாஜீர்ரஹ்மான் மற்றும் M.F.பைஜீர்ரஹ்மான் இவர்களின் தந்தை வடை பாருக் என்கிற A.Jமுஹம்மது பாருக் அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

Read More