அரசு பேருந்து கண்டனம் அதிரடியாக உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது

தமிழ்நாட்டில் பஸ் கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 6 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று இன்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயாகவும் இருந்தது. இப்போது  குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண பஸ் (10 கி.மீ) கட்டணம் புறநகர் ரூ. 5-ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு விரைவு பஸ் கட்டணம் (30 கி.மீ)  ரூ.17-ல் இருந்து ரூ.24 ஆக உயர்வு அதி சொகுசு, இடைநில்லா பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ் கட்டணம் (புறவழிச்சாலை 30 கி.மீ) ரூ.18-ல் இருந்து ரூ.27 ஆக உயர்வு அதிநவீன சொகுசு…

Read More

ஆயங்குடி பெரிய பள்ளிவாசலில் பூட்டை உடைத்து திருட்டு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் கொள்ளை போகியுள்ளது. பள்ளிவாசலில் கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டும் ஊரில் முக்கியமான இடங்களில் கேமரா பொருத்த வேண்டும்  எனவும் அதே வேளை புதிய நபர்களை கண்காணிக்கப்பட வேண்டும் இரவும் நேரங்களில் மின்சாரம் இல்லாத சமயங்களில்  ரோந்து சென்று ஊரின் பாதுகாப்பையும் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதிபடுத்தப்பட வேண்டும் என  ஊர் மக்கள் ஆலோசனை கூறிவருகின்றனர் .

Read More