மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்றார் மோர்சி!

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை. எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி  மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கி காவலில் உள்ளனர். இவர்களில் சுமார் 100 பேருக்கு ஏற்கனவே தனித்தனியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் மோர்சிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதி மரண தண்டனை…

Read More

மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடை: மதசுதந்திரத்தை தடைச் செய்யும் மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கை, மமக அறிக்கை:

மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடை: மதசுதந்திரத்தை தடைச் செய்யும் மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: மும்பையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களின் நிறுவனமான ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டென்சன்’ (ஐ.ஆர்.எப்) என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டேசன் பெற்ற வெளிநாட்டு பணங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது கண்கூடாக தெரிந்த பிறகு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் உரிமம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் உண்மைகளை ஒத்துக் கொள்ள மறுத்த திரு. நரேந்திர மோடி தலைமையிலான…

Read More