கொள்ளுமேட்டில் மமக 8ம் ஆண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சி..

தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சின் 8ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக 20/02/2016 சனிக்கிழமை (இன்று) கடலூர் தெற்கு மாவட்ட மமக சார்பில் மாவட்டம் முழுவதும் மமக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் படி கொள்ளுமேடு கிளையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மமக மாநில அமைப்புச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் தமுமுகவின் கருப்பு வெள்ளைக் கொடியை ஏற்றினார். மமக மாநில இளைஞரணி செயலாளர் புழல் ஷேக் முஹம்மது மமகவின் மூவர்ணக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வில் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மவ்லவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி, கடலூர் தெற்கு தமுமுக,மமகவின் மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய நகர,பேரூர்,வார்டு,கிளை நிர்வாகிகளும்,மாணவர் இந்தியா உள்ளிட்ட தமுமுக,மமகவின் அணிகளின் நிர்வாகிகளும் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கொள்ளுமேட்டில் இக்கொடியேற்று நிகழ்வை தமுமுக கிளை செயலாளர் ஏ.கே.வஜ்ஹுல்லாஹ்…

Read More