2016ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை: 2016ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2016ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), ரோஸிடவர், 3ம் தளத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடம் இருந்து ஹஜ் 2016க்கான விண்ணப்பப்படிவங்களை நாளை முதல் (14ம் தேதி) பெற்றுக்கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும் பயன்படுத்தலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ்…

Read More