மனிதநேய மக்கள் கட்சி பெயர், கொடியை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

மனிதநேய மக்கள் கட்சி யின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்ட விரோதமானது மனிதநேய மக்களின் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாங்கள் கடந்த வாரம் பொதுக்குழுவை கூட்டிய நிலையில் முன்னாள் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தஞ்சாவூரில் நடத்திய பொதுக்குழு சட்ட விரோதமானது. எங்களை தவிர மற்றவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியையோ, பெயரையோ பயன்படுத்த கூடாது. இது குறித்த அறிவிப்பை நாங்கள் நாளிதழ்களில் வெளியிட்டுள்ளோம். அதையும் மீறி…

Read More