இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்.

பைக் ஓட்டுவோர், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் இன்று முதல் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், “ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிரடியாக கூறியிருந்தது. இதையடுத்து பைக் ஓட்டிகள் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டது. இன்று முதல் இந்த கட்டாய ஹெல்மெட் திட்டம்…

Read More