லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 72வது பட்டமளிப்பு விழா

jma-graduation00லால்பேட்டை.மே -12

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 153 ஆம் ஆண்டு விழா 72 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

ஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் அப்துல் சமது வரவேற்றார்.

காயல்பட்டணம் ஹாமிது பக்ரி ஹள்ரத், சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர்கள் அப்துஸ் ஸமது ஹள்ரத், காசிம் ஹள்ரத், மத்ரஸா முன்னால் மாணவர் அப்துல்ரஹ்மான் , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ் ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். கணினி பயிற்ச்சி சான்றிதழை ஜாமிஆ தலைவர் அப்துல் ஹமீது வழங்கினார் ஜாமிஆ பொருளாளர் சார்பில் ஜாக்கீர் உசேன் ஹள்ரத் நன்றி கூரினார்.

இறுதியாக ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத்  துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

முதன் முறையாக தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் இருந்து ஜாமிஆ  பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை வெளிநாட்டில் உள்ளவா்கள் காண லால்பேட்டை.நெட் , லால்பேட்டைஎக்ஸ்பிரஸ்.காம் கொள்ளுமேடு.காம் இணையதளங்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்தது . புகழ் அனைத்தும் இறைவனுக்கே .. .. நேரலை ஒளிப்பதிவு உதவி முஹம்மது அன்வர்.

 



Related posts

Leave a Comment