லால்பேட்டை, மங்களம்பேட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழக்
கூடிய பகுதியாகும்.

மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.க.அ. அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சமுதாய மக்கள் பயன் பெற அப்பகுதியில் கலைக் கல்லூரி அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதனைத் தொடர்ந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அதனை வலியுறுத்தி வந்தார்.

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி பள்ளி கூட விழாவில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் MLA அவர்களும் அப்பகுதியில் சமுதாய மக்கள் பயன் பெறும் வகையில் கலைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி பேசினார்.

இந்நிலையில் சிதம்பரம் லால்கான் மஸ்ஜித் திற்கு சொந்தமான எள்ளேரியில் கலைக் கல்லூரி அமைக்க 5 ஏக்கர் நிலம் கேட்டு தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரியத்திற்கு விண்ணப்பித் துள்ளது.

இன்று 12.05.2018 காலை 10.30 மணி யளவில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற வக்ஃப் வாரிய கூட்டத்தில் சிதம்பரம் லால்கான் மஸ்ஜித் திற்கு சொந்தமான லால்பேட்டை அருகே உள்ள எள்ளேரியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் அனுமதி அளித்தனர்.

புகைப்படம் & தகவல்:-
மேலப்பாளையம் அப்துல் ஜப்பார்
சட்டமன்ற உறுப்பினரின் தனிச் செயலாளர்

தொடர்பான பதிவுகள்

Share

About Author

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். ( 49 : 12)

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே.

4. அதற்கு கொள்ளுமேடு.காம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.