லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

நேற்று 19-06-2016 கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் ‪தமுமுக மமக‬ ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் லால்பேட்டை கமாலியாவீதி நூர் மஹாலில் சமுதாய பேரியக்கத்தின் தலைவர் மௌலவி ‪J.S.ரிஃபாயி ரஷாதி‬ அவர்கள் தலைமை ஏற்று எழுச்சியுரை நிகழ்த்தினார்

‪‎தமுமுக மாநில பொதுச் செயலாளர் ‪‎P.S.அப்துல் ஹமீது‬ அவர்கள் மற்றும் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ‪M.Y.முஹம்மது அன்சாரி‬ அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிள் மமக மாவட்ட செயலாளர் H.நூரூல் அமீன் அவர்கள் தமுமுக மாவட்ட செயலாளர் S.M.J.முஹம்மது அஸ்லம் அவர்கள் மமக மாவட்ட பொருளாளர் M.S.அப்துல் பாஸித் அவர்கள் தமுமுக மாவட்ட பொருளாளர் புவனை சவுகத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்தனர். மற்றும் சஹர் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது

இதில் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகளும் முன்னால் மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் ஒன்றியம், நகரம் பேரூர் கிளை கழக நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்

இக்கூட்டத்தின் முடிவில் தமுமுக மாவட்ட செயலாளர் S.M.J.முஹம்மது அஸ்லம் அவர்கள் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment