லால்பேட்டையில் நடைபெற்ற ஷிர்க் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்

லால்பேட்டைநகர ஜமாஅத்துல் உலமா முஸ்லிம் ஜமாஅத் நடத்திய ஷிர்க் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 26.01.2016 அன்று அசர் தொழுதபின் முதல் அமர்வு தொடங்கியது. ஹாஜி அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மௌலானா மௌலவி காரி முஹம்மது ஹஜ்ரத் கிராஅத் ஓதினார். மௌலவி முஹம்மது அஸ்அத் வரவேற்றார். மௌலவி எம்.ஒய். முஹம்மது அன்சாரி தொடக்க உரையாற்றினார். மௌலவி ஜாகிர்ஹுசைன் ஹஜ்ரத் அறிமுக உரையாற்றினார்.

1அத்துடன் முதல் அமர்வு முடிவுற்று

ம ஃரிப் தொழுகை இடைவேளை விடப்பட்டது. தொழுகைக்கு பின் மௌலானா மௌலவி, Jma முதல்வர் அரசு காஜி நூருல்அமீன் ஹஜ்ரத் தலைமை ஏற்று உரையாற்றினார்.
தொடர்ந்து மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும், வேதாளை மஹ்மூது ரிபாயி ஹஜ்ரத் அவர்களும் உரையாற்றினர்.

இறுதியாக மௌலானா மௌலவி ஹாமித் பக்ரி ஹஜ்ரத் சிறப்பான எழுச்சியுரையாற்றினார். மௌலவி சலாஹுத்தீன் நன்றி கூறினார்.

இன் நிகழ்ச்சியை வெளிநாட்டில் உள்ளவா்கள் காண லால்பேட்டை.நெட் , லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளங்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்தது .

முதல் அமர்வு
Your browser does not support iframes.
இரண்டாவது அமர்வு
Your browser does not support iframes.

Related posts

Leave a Comment