நகர தமுமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து தெருமுனைக் கூட்டம்

லால்பேட்டை நகரம் தமுமுக சார்பில் முத்தலாக் மசோதா ஷரீஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் தெருமுனைக் கூட்டம் 14-01-2018 அன்று லால்பேட்டை தமுமுக அலுவலகம் எதிரில் S.A.முனைவர் ஹுசைன் நினைவரங்கில் தமுமுக மமக நகர தலைவர் M.முஹம்மது கியாசுதீன் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமுமுக மாநில உலமா அணி செயலாளர் M.Y.முஹம்மது அன்சாரி தொகுப்புரையாற்றினார் மமக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது எழுச்சியுரையாற்றினார்

இதில் தமுமுக மமக மாவட்ம் மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் நகரம்,ஒன்றியம், பகுதி கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் முடிவில் தமுமுக நகர செயலாளர் முஹம்மது ஹனிபா நன்றியுரை நிகழ்த்தினார்.

Related posts

Leave a Comment