கொள்ளுமேட்டில் முதன் முறையாக ஈத்கா’வில் பெருநாள் தொழுகை.

லால்பேட்டை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் பெருநாள் தொழுகைகள் ஈத்கா எனப்படும் மைதானங்களில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.

வருடத்தில் பெருநாள் தொழுகைகள் மட்டுமே நடத்துவதற்காக தமிழகம் முழுவதும் முஸ்லிம் பகுதிகளில் ஈத்கா பள்ளி அல்லது குத்பா பள்ளிகள் என்ற பெயரில் மைதானங்கள் காணப்படும்.

இவை நம் முன்னோர்கள் அல்லாஹ்வுக்காக செய்த ஏற்பாடுகள் ஆகும்.

கொள்ளுமேட்டில் இடமின்மை காரணமாக இதுநாள் வரையில் பெருநாள் தொழுகைகள் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் மதீனா ஜும்ஆ பள்ளி ஆகியவற்றில் மட்டுமே நடந்து வந்தது.

சமீபத்தில் கொள்ளுமேட்டில் இரு ஜமாஅத்தார் மனங்களில் கசப்புகள் நீங்கி ஒன்று பட்டதன் விளைவாக, பெருநாள் தொழுகையை ஈத்கா மைதானத்தில் நடத்தப்பட்டு ஒற்றுமை இன்னும் பலமாக நிலை நிறுத்துவதற்கான அடித்தளமாக இந்த செயல் அமைந்துள்ளது.

இதயங்கள் இணைந்ததால்… பெருநாள் தொழுகைக்கான இடங்களை அல்லாஹ்வே ஏற்பாடு செய்து விட்டான்.

அல்ஹம்துலில்லாஹ்.

“இனி வரும் காலங்களில் நம் ஜமாஅத்தார்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி…”
*******************************
இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் ரமலானில் ஜகாத் மற்றும் ஃபித்ராவை இரண்டு ஜமாஅத்களும் இணைந்து வசூலித்து தேவையுடையோருக்கு வழங்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டால் அது இன்னும் சிறப்பான செயலாக அமையும்.

இதை எனது கோரிக்கையாக ஜாமிஆ மஸ்ஜித், மதீனா ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு முன் வைக்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எண்ணங்கள் நேராக்கி, அவனுக்கு பொருத்தமான வகையில் வாழ தவ்ஃபீக் செய்வானாக.

அனைவருக்கும் எனது மனமார்ந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழ்வுடன்,
முஹம்மது ரிஃபாயி,
அல் அய்ன்.

ஈத் முபாரக்

 

 

Related posts

Leave a Comment