கொள்ளுமேடு நிஸ்வான் பெண்கள் மதரஸாவில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பெண்கள் சிறப்பு பயான் நடைப்பெற்றது!

ஜமாஅத்துல் உலமா சபை கொள்ளுமேடு நகர கிளையின் சார்பாக
16-10-15 வெள்ளி மாலை 3 மனி அளவில் கொள்ளுமேடு நிஸ்வான் பெண்கள் மதரஸாவில்   பெண்கள் சிறப்பு பயான் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கொள்ளுமேடு நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி நிசார் அஹமது மன்பஈ ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள் நகர செயலாளர் மவ்லவி இம்தாதுல்லாஹ் மன்பஈ முன்னிலை யில் நகர பொருளாளர் மவ்லவி கலீலுல்லாஹ் பைய்யாஜி அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள் கடலூர் மாவட்ட துனை தலைவர் மவ்லவி பக்கீர் முஹம்மது மன்பஈ அவர்கள் சிறப்பு சொர்பொழிவு ஆற்றினார்கள்.

மாவட்ட பொருளாளரும்,வட்டார செயலாளருமான மவ்லவி ஸலாஹுத்தீன் மன்பஈ உட்பட நகர ஜமாஅத்துல் உலமாவின் உருப்பினர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள்

Related posts

Leave a Comment