கடலூரில் SP அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.

நேற்று பொய் புகாரின் பேரில் லால்பேட்டையை சேர்ந்த மசூது அஹமது கைது செய்யப்பட்டார் இந்த பொய் புகாரை வைத்து காவல் துறை நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும் கைது செய்யப்பட மசூது அஹமதுவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமுமுக மற்றும் மமக சார்பில் மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் இன்று 11.11.2016 மாலை கடலூரில் மாவட்ட காவல் துறை அதிகாரி SP அலுவலத்தை முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.

போராட்ட நடைபெற்ற இடத்தில் மாநில நிர்வாகிகளிடம் மாவட்ட போலிஸ் அதிகாரிகள் பேசினர் நமது தரப்பில் அத்துமீரிய காட்டுமன்னார்கோயில் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் இது போன்ற தவறுகள் இனி நடக்காது என்று மாவட்ட போலிஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர்
ஆயிரக்கணக்கான இளைஞர்களும்,பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

Related posts

Leave a Comment