எள்ளேரியில் மஸ்ஜித் முஹிப்பி ஷாஹ் நூரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

சமுதாய தலைவர்கள் – சங்கைக்குரிய ஆலிம்கள் – அமைச்சர் – சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றர்

கடலூர் மாவட்டம் லால்பேட்டை அருகே எள்ளேரியில் பிடாரிகுளம் அருகே உள்ள தென்றல் நகரில் மஸ்ஜித் முஹிப்பி ஷாஹ் நூரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 2018 ஜுன் 25 ம் தேதி திங்கட்கிழமை (ஹிஜ்ரி 1439 ஷவ்வால் பிறை 10) அன்று காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

மவ்லானா மவ்லவி ஏ. முஹம்மது ஷஃபீ முஹிப்பி மன்பஈ ஹள்ரத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி க்கு,

எள்ளேரி தெற்கு தெரு, வடக்குத் தெரு ஆகிய மஹல்லாக்களின் நாட்டாண்மைகள், முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள், ஊர் பொதுமக்கள், இமாம்கள் மற்றும் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

லால்பேட்டை ஜே.எம்.ஏ. அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா ஹாஃபிழ் காரி ஆர்.இஜட். முஹம்மது அஹ்மது ஹள்ரத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.

முஹிப்பி ஷாஹ் நூரி பள்ளிவாசல் முத்தவல்லி ஏ. முஹம்மது தையிப் முஹிப்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் லால்பேட்டை சல்மான் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சிங்கப்பூர் மவ்லானா அல் ஆரிஃபுபில்லாஹ் கலீஃபா மஹ்வீ ஷாஹ் முஹிப்பி திஷ்தியுல் காதிரி ஹள்ரத் புதிய பள்ளிவாசலை திறந்து வைத்து துஆச் செய்கிறார்.

புதுச்சேரி மர்கஜ் அல் இஸ்லாஹ் நிறுவனர் மவ்லானா மவ்லவி அல் ஆரிஃபுபில்லாஹ் சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாகவி ஹள்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான்,

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஹாஃபிழ் பி.ஏ. காஜா மொய்தீன் ஹள்ரத், லால்பேட்டை ஜே.எம்.ஏ. அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹள்ரத், சென்னை கைருல் பரிய்யா மகளிர் அரபுக்கல்லூரி நிறுவனர் மவ்லானா ஏ. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத், லால்பேட்டை ஜே.எம்.ஏ. அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா ஹாஃபிழ் காஜி ஏ. நூருல் அமீன் ஹள்ரத், சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி நிறுவனர் மவ்லானா ஆஷிகுர் ரசூல் பிலாலி ஷாஹ் ஜுஹூரி ஹள்ரத்,

புதுசேரி மாநில வருவாய் & போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜஹான், இந்திய தேசிய லீக் தலைவர் எம். பஷீர் அஹ்மத், எஸ்.டி.பி.ஐ. தலைவர் மவ்லானா கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஹள்ரத், லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரித் தலைவர் மவ்லானா ஹாஃபிழ் காரி ஏ. ஃபைஜுர் ரஹ்மான் மதனி ஹள்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மவ்லானா தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான் ஹள்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஃபைஜி இஸ்லாமிய கீதங்கள் பாடுகிறார்.
ஹாஃபிழ் எஸ்.ஜி. அதீகுர் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ. ஆகியவற்றின் மாநில – மாவட்ட – நகர நிர்வாகிகள், சமுதாய பிரமுகர்கள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான சிறப்பு பயான் 24 – 06 – 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெறும். இந்நிகழ்வில் சென்னை கைருல் பரிய்யா அரபுக்கல்லூரி நிறுவனர் மவ்லானா ஏ. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் சிறப்புரையாற்றுகிறார்.

மஸ்ஜித் முஹிப்பி ஷாஹ் நூரி புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் முத்தவல்லி ஏ. முஹம்மது தையிப் முஹிப்பி தலைமையிலான வரவேற்பு குழுவினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment