அமீரக ஷார்ஜா மண்டலம் தமுமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி.

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் சி.கே.சனாவுல்லா,திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா,தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஹமீது ரஹ்மான் மற்றும் திமுக,முஸ்லீம் லீக், மதிமுக,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஷார்ஜா இந்தியன் சோஷியல் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார்.

அமீரக தமுமுக துணைச் செயலாளர் கஸ்ஸாலி, ஷார்ஜா மண்டல தமுமுக தலைவர் ஆயங்குடி சலீம் ரப்பானி உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஷார்ஜா,அஜ்மான்,துபை,அபுதாபி,அல் அய்ன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment