அமீரக டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் 50 உலக நாடுகளில் வாகனம் ஓட்டலாம்

அமீரக டிரைவிங் லைசென்ஸை வைத்துக் கொண்டு 20 அரபுநாடுகள் உட்பட மொத்தம் 50 உலக நாடுகளில் வாகனங்களை ஓட்டலாம் என அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரபுநாடுகள் தவிர்த்து முன்னதாக 9 உலக நாடுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 50 நாடுகளாக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் மேலும் பல நாடுகள் சர்வதேச லைசென்ஸை மட்டுமே அனுமதிப்பதால் அமீரகம் தொடர்ந்து இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் பணியையும் இன்னொருபுறம் தொடரும் எனவும் விளக்கியுள்ளது.

நேரடி அமீரக லைசென்ஸை அனுமதிக்கும் நாடுகள்:
1. சவுதி அரேபியா
2. பஹ்ரைன்
3. குவைத்
4. ஓமன்
5. அல்ஜீரியா
6. மொராக்கோ
7. சிரியா
8. ஜோர்டன்
9. லெபனான்
10. ஏமன்
11. சோமாலியா
12. சூடான்
13. மவ்ரிடானியா
14. டிஜிபோட்டி
15. கோமோரோஸ்
16. துனிசியா
17. ஈராக்
18. பாலஸ்தீன்
19. ஸ்பெயின்
20. பிரான்ஸ்
21. அமெரிக்கா (U.S)
22. இங்கிலாந்து (U.K)
23. இத்தாலி
24. ஜெர்மனி
25. டென்மார்க்
26. சுவிட்சர்லாந்து
27. நெதர்லாந்து
28. ஸ்லோவோக்கியா
29. அயர்லாந்து
30. ஆஸ்திரியா
31. கிரீஸ்
32. சுவீடன்
33. சீனா
34. போலாந்து
35. கனடா
36. துருக்கி
37. நார்வே
38. லாத்வியா
39. நியூஸிலாந்து
40. செர்பியா
41. தென் ஆப்பிரிக்கா
42. பின்லாந்து
43. ஹங்கேரி
44. லக்ஸம்பர்க்
45. லித்துவேனியா
46. சிங்கப்பூர்
47. ரொமானியா
48. செர்பியா
49. பெல்ஜியம்
50. போர்ச்சுகல்

எனினும் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்கள் மற்றும் நடைமுறையை அறிந்து அதற்கேற்பவே பயன்படுத்த முடியும்.

Source: Whatson.ae / The National / Msn
தமிழில்: அதிரை நியூஸ்

Related posts

Leave a Comment