அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு,
1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த கட்டணத்தில் இன்சூரன்ஸ் செய்தால் போதுமானது.

2. அமீரகத்தின் வழியாக பயணிக்கும் டிரான்ஸிட் பயணிகள் 48 மணிநேரம் வரை கட்டணம் இன்றி உள்ளே வந்து செல்லலாம், அதேபோல் 96 மணிநேரம் வரை நீட்டித்து தரப்படும் டிரான்ஸிட் விசாவிற்கு 50 திர்ஹம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

3. புதிய விசா தொடர்பான மாற்றங்களை அமீரகத்தில் உள்ள சுற்றுலாவாசிகள், ரெஸிடெண்ட் விசாவில் உள்ளவர்கள், குடும்ப விசாவில் உள்ளவர்கள், விசா முடிந்தும் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் ஆகியோரும் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

4. சட்ட விரோதமாக விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் தாங்களாகவே விரும்பி நாட்டை வெளியேற முன்வந்தால் அவர்களுடைய பாஸ்போர்ட்டில் “No Entry Stamp” அடிக்காமல் அனுப்பப்படும்.

5. அமீரகத்தில் தங்கி வேலைசெய்யும் நோக்குடன் வந்து அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு மேலாக தங்கி இருப்பவர்களின் நலனுக்காக புதிய 6 மாத கால அனுமதி விசா வழங்கப்படும்.

6. சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்து தங்கி இருப்பவர்கள் தாமாக
முன்வந்து விமான டிக்கெட்டுடன் வந்தால் அவர்களின் பாஸ்போர்ட்டில் 2 வருடத்திற்கு மட்டும் “No Entry Stamp” அடித்து வெளியேற்றப்படும்.

7. விசா மாற்றத்திற்காக முன்பு கட்டணம் பெற்றுக்கொண்டு செய்யப்பட்ட சேவையை இனி கட்டணம் செலுத்தாமலும், நாட்டை விட்டு வெளியேறாமலும் உள்ளுக்குள்ளேயே விசாவை மாற்றிக் கொள்ளலாம்.

8. மாற்றுத் திறனாளிகளும் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் பிறருக்கு சமமான வேலைவாய்ப்புகளை இனி எளிதாக என்பது உட்பட பல விசா சட்டங்களில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்

Related posts

Leave a Comment