அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முப்பெரும் விழா சமுதாய தலைவர்கள், சங்கைமிகு ஆலிம்கள் ஆகியோருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அமீரக தலைநகர் அபுதாபியில் சிறப்பாக செயலாற்றி வரும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் வெள்ளி விழா, மலர் வெளியீட்டு விழா, இஃப்தார் பெருவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா மிக்க எழுச்சியோடும், மிகுந்த உற்சாகத்தோடும் அபுதாபியில் நடைபெற்றது. இவ்விழாவில் சமுதாய தலைவர்கள், சங்கைமிகு ஆலிம்கள் ஆகியோருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் தலைவர் எம்.முஹம்மது ஷுஐப் தலைமை தாங்கினார்.

விழா தலைமையை ஜமாஅத்தின் பொருளாளர் நஜீர் அஹ்மத் முன்மொழிய துணைத் தலைவர் எஸ்.ஏ.முஹம்மது தைய்யிப் வழிமொழிந்தார்.

ஜமாஅத்தின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாணவர் எஸ்.சலாஹுத்தீன் அய்யூப், மாணவி எம்.சஹலா சுஹைப் ஆகியோர் இறைமறை வசனங்களை ஓதி விழாவை துவக்கி வைத்தனர்.

ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.ரஃபி அஹ்மத் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலித் கமிட்டி தலைவர் காயல் மௌலவி ஹாஃபிழ் ஹுசைன் மக்கீ ஆலிம் மஹ்ழரி துவக்க உரையாற்றினார்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வரும், தமிழக அரசின் அரசு காஜியுமான மௌலானா மௌலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் ஏ.நூருல் அமீன் ஹள்ரத் வெள்ளி விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களான
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ்.எம்.பி., மௌலானா அல்ஹாஜ் தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் ஹள்ரத், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எக்ஸ்.எம்.எல்.ஏ., நோபில் மரைன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஷாஹுல் ஹமீத், பனியாஸ் பில்டிங்க மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் அப்துல் ஹமீத் மரைக்காயர் உள்ளிட்டோர் மலரை பெற்றுக் கொண்டு ஜமாஅத்தின் செயல்பாடுகளை பாராட்டியும், லால்பேட்டையின் சிறப்புக்களை விவரித்தும் உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீத், அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமையாசிரியர் பேராசிரியர் ஷேக் அலாவுத்தீன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் கீழை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான், பேரவையின் அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, துபை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் எம்.ஹெச்.முஹம்மது பஷீர் இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் அப்துல் காதர், அபுதாபி தமிழ்ச்சங்க தலைவர் ரெஜினால்ட், அமீரக தமுமுக நிர்வாகி ஷஃபீயுல்லாஹ், மௌலித் கமிட்டி நிர்வாகி மீரான் ஃபைஜி, பாரதி நட்புக்காக கலீல், கோவை பைசல் உள்ளிட்டோரும் வெள்ளி விழா மலரை பெற்றுக் கொண்டனர்.

ஜமாஅத்தின் துணை பொருளாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாவில் லால்பேட்டை துபை முஸ்லிம் ஜமாஅத், அய்மான் சங்கம், அமீரக காயிதே மில்லத் பேரவை, இந்திய முஸ்லிம் பேரவை, மௌலித் கமிட்டி, தமுமுக-மமக உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், பல்வேறு ஊர் ஜமாஅத்களின் நிர்வாகிகள், சங்கைமிகு ஆலிம்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஜமாஅத்தின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவின் நிகழ்வுகள் அனைத்தும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ், லால்பேட்டை.நெட், கொள்ளுமேடு.காம் ஆகிய இணையதளங்களில் ஒளிபரப்பப்பட்டது.

Thanks lalpetxpress

Related posts

Leave a Comment